சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  குமராட்சியில் அந்தக் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் செ.முருகன் தலைமை வகித்தார்.
  கே.சண்முகம் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் மூ.ராதாகிருஷ்ணன், தி.ராஜேஷ், செ.அன்பரசன், சி.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் கு. குமரவேல், ம.தவசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாநில துணைப் பொதுச் செயலர் த.அசோக்குமார், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் தி.தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாவட்டச் செயலர் ரா.கருணைமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அருள், ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியச் செயலாளர் க.பாலமுருகன் நன்றி கூறினார்.
  தீர்மானங்கள்: விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிதம்பரம் நகரத்தில் நடக்கும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், குமராட்சி பகுதியில் செயல்படும் மணல் குவாரியில் அரசு அனுமதித்ததை விட அதிக ஆழத்தில்
  இரவு பகலாக மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், ஒக்கி புயலால் இறந்த மீனவர்களுக்காக இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை
  வேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai