சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் புள்ளியியல் துறை சார்நிலை அலுவலர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இரண்டு ஆண்டுகள் பணி முடித்த புள்ளியியல் உதவி ஆய்வாளர்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்தவாறு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 268 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்கள் தரமிறக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.
    நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் புள்ளியியல் அலுவலர், உதவி இயக்குநர் பதவி உயர்வை வழங்க வேண்டும். இந்தத் துறையின் தகவல் சேகரிப்பு பணியை துறையே மேற்கொள்ள வேண்டும், தனியார் மயத்தை தடுத்து நிறுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு புள்ளி இயல் சார்நிலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடலூரில் உள்ள மண்டல புள்ளியியல் இணை இயக்குநர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ.லெனின் தலைமை வகித்தார்.
    துணைத் தலைவர் கோ.ராமதாஸ், செயற்குழு உறுப்பினர் ச.சத்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் ப.அந்துவன்சேரல் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
    மாவட்டத் தலைவர்கள் த.முகிலன் (தஞ்சாவூர்), எஸ்.கண்ணன் (திருவாரூர்), ஆர்.சுப்பிரமணியன் (நாகப்பட்டினம்), எம்.பாண்டியன்
    (விழுப்புரம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai