சுடச்சுட

  

  அரசூர் கிராமத்தில் உள்ள மணல் குவாரியை மூட வலியுறுத்தி, வெள்ளூர் கிராம மக்கள் வாகனங்களை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  சிதம்பரம் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இந்தக் குவாரிக்கு வெள்ளுர் கிராமம் வழியாக லாரிகள் செல்கின்றன.
  கடந்த 19}ஆம் தேதி குவாரிக்கு சென்ற லாரி மோதியதில், வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆனந்தபிரபு (29) உயிரிழந்தார். இதனால், குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சடலத்தை வாங்க மறுத்து 20}ஆம் தேதி சிதம்பரத்தில் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கோட்டாச்சியர் பேச்சுவார்த்தையில் வருகிற ஜன.3}ஆம் தேதி வரை குவாரியை தாற்காலிகமாக மூடுவதாக தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் கேரளம் மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரை குமராட்சி போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல மணல் குவாரி இயங்கத் தொடங்கியது.
  இதனால், ஆத்திரமடைந்த வெள்ளுர் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே சென்று லாரிகளுக்கு மணல் ஏற்றும் இடத்தில் வாகனங்களை மறித்து முற்றுகையிட்டனர்.
  காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. பொதுமக்கள் பந்தல் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. போராட்டத்தால் குவாரி செயல்படவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai