சுடச்சுட

  

  விடுதிக் காப்பாளரிடம் ரூ.3 லட்சம் திருட்டு: முதியவர் கைது

  By DIN  |   Published on : 23rd December 2017 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காட்டுமன்னார்கோவிலில் விடுதிக் காப்பாளரிடம் ரூ.3 லட்சம் திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
  கலிகடந்தான் கிராமத்தைச் சேர்ந்த அரசு மாணவர் விடுதிக் காப்பாளர் விவேகன் (47). இவர் கடந்த செப்.22}ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் இந்தியன் வங்கிக் கிளையிலிருந்து எடுத்து வந்த ரூ.3 லட்சத்தை மர்ம நபர்களிடம் பறிகொடுத்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக, கடலூர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
  இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் உதவி ஆய்வாளர் சிவராமன் கடந்த 20}ஆம் தேதி வடவாற்றங்கரை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 68 வயது மதிக்கத்தக்க முதியவர் போலீசாரைக் கண்டதும் தப்பிக்க முயற்சித்தார். அவரை போலீஸார் துரத்திப் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
  விசாரணையில் அவர், ஆந்திரம் மாநிலம், சித்தூர் மாவட்டம், ஓஜிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் எனத் தெரியவந்தது. விசாரணையில் சுப்பிரமணியன் உள்பட 4 பேர் விவேகனின் பைக்கில் இருந்த பெட்டியை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் பணத்தை பறிமுதல் செய்து கைதுசெய்தனர். மேலும், இதுதொடர்பாக, ஆந்திராவை பூர்விகமாக கொண்டு தற்போது திருச்சியில் வசிக்கும் தாமரைசெல்வன், அதே பகுதியை சேர்ந்த சரவணன், பரந்தாமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai