அறிவியலாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published on : 24th December 2017 02:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அறிவியலில் சிறந்து விளங்குவோருக்காக அறிவியல் நகரம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி, 2016 -ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது. இதில், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள், விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட இணையதள முகவரிக்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய பசுமைப் படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.செல்வநாதன் தெரிவித்தார். இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 12 -ஆம் தேதி கடைசி நாளாகும்.