சுடச்சுட

    

    உலக விவசாயிகள் தின விழாவில்600 வகையான பாரம்பரிய விதைகள் கண்காட்சி

    By DIN  |   Published on : 24th December 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் உலக விவசாயிகள் தின விழாவில் பண்ருட்டியைச் சேர்ந்த கவிதை கணேசன் என்பவர் வைத்த 600 வகையான பாரம்பரிய விதைகள் கண்காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
    கண்காட்சியில் அவர், 600 வகையான விதைகளைப் பார்வைக்கு வைத்திருந்தார் . குறிப்பாக, 350 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளையும், மற்ற பயிர்களின் விதைகளையும் பார்வைக்காக வைத்திருந்தார்.
    நெல் விதைகளின் பெயர், அதன் உயிரியல் பெயர் ஆகியவற்றையும் பதிவு செய்து வைத்திருந்தார். புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய கருப்பு கவுனி நெல் விதை, பாரம்பரிய காளான்நமக்கு, கருங்குருவை, கருடன் சம்பா, தங்க சம்பா, காட்டுயானம், வாசனை சீரகசம்பா, தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்னாடகா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய நெல் விதைகளையும் சேகரித்து கண்காட்சியில் வைத்திருந்தார். நவதானிய விதைகள், கருப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு நிற தினை வகைகள் உள்பட அனைத்து வகையான பயிர்களின் விதைகளையும் காட்சிக்காக வைத்திருந்ததோடு, அதுகுறித்தும் பார்வையாளர்களுக்கு அவர் விளக்கமளித்தார்.
    பாரம்பரிய விதைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும், அதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் கவிதை கணேசன் கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai