Enable Javscript for better performance
கோயில் வளாகத்தில் முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் அருகே கோயில் வளாகத்தில் முதியவர் இறந்துகிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    கடலூர் புதுப்பாளையத்தில் ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வாசலில் சிலர் பிச்சையெடுத்து வருவதோடு, இரவு நேரத்தில் கோயில் வளாகத்திலேயே தூங்குவதும் வழக்கமாம். அதன்படி, வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் தூங்கிய முதியவர் இறந்த கிடந்தாராம்.
    தகவலறிந்த கடலூர் புதுநகர் காவல் துறையினர் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ரவி (50) என்பதும், கோயில் வளாகத்தில் பிச்சையெடுத்து வந்ததும் தெரிய வந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

    விஷம் அருந்திய ஆண் சாவு

    கடலூர் அருகே விஷம் அருந்திய ஆண் உயிரிழந்தார்.
    கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அ.பாலசந்திரன் (48). இவர், வேலைக்குச் செல்லாமல் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தாராம். மேலும், திருமணம் ஆகாததால் மனம் வேதனையடைந்த நிலையில் காணப்பட்ட இவர், வெள்ளிக்கிழமை மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு, கடலூர் பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடந்தாராம். அவரது நண்பர்கள் அவரைப் பார்த்தபோது இறந்து கிடந்தாராம்.
    இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர் பாலச்சந்திரன் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக கடலூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    இதுகுறித்த புகாரின் பேரில், சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai