சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவில் அருகே உடையார்குடியில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோயிலான அனந்தீஸ்வரர் கோயில் கோபுரம் செடி, கொடிகள் வளர்த்து சிதைந்து வருகிறது.
  காட்டுமன்னார்கோவில் அருகே உடையார்குடி பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழர் காலத்தில் கட்டப்பட்ட செளந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
  இந்தக் கோயில் சோழர் கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது. இது கால சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் ஸ்தலமாகும். அதனால், இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு விஷேச தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோயில் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுபாட்டின் கீழ் உள்ளது.
  புகழ் வாய்ந்த இந்தக் கோயிலின் கோபுரத்தின் மாடங்களிலும், சிற்பங்களுக்கிடையிலும் செடிகள், கொடிகள் வளர்ந்து கோபுரத்தின் அழகைச் சிதைத்து வருகிறது. கோயில் சிற்பங்களும் சேதமடையும் நிலையில் உள்ளன.
  செடிகள், மரங்களாக வளர்ந்துவிட்டால் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு, முகப்புக் கோபுரம் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai