சுடச்சுட

  

  ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாளை உழவர் தினமாகக் கொண்டாட வேண்டும்: பாமக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 24th December 2017 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2 ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாளை உழவர் தினமாகக் கொண்டாட வேண்டும் என
  கடலூர் மாவட்ட பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
  அந்தக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூர் முதுநகரில் கிழக்கு மாவட்டத் தலைவர் ம.ராஜ்குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார்.
  கடலூர் நாடாளுமன்றத் தொகுதி பாமக மேற்பார்வையாளர் எம்.என்.கருணாநிதி, மாநிலத் துணைப் பொதுச் செயலர்கள் பழ.தாமரைக்கண்ணன், அசோக்குமார், மாவட்டச் செயலர்கள் சண்.முத்துக்கிருஷ்ணன், இரா.ஆறுமுகம், சுரேஷ், அ.செ.முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
  கூட்டத்தில் 2 ஜி வழக்கில் மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என அனைவரும் உணரும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாளை உழவர் தினமாகத் தமிழக அரசு கொண்டாட வேண்டும். வருகிற 30- ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில பாமக பொதுக் குழுவில் மாவட்டத்திலிருந்து பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பாமக அமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன், மாநில இளைஞரணித் துணைச் செயலர் கோ.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வாட்டர்மணி, மாவட்ட அமைப்புச் செயலர் ஸ்டாலின், தொழிற்சங்கத் தலைவர் சிவ.ரமேஷ், நகரத் தலைவர் த.மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டத் தலைவர் செல்வஜெகன் வரவேற்றார். நகரத் தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai