Enable Javscript for better performance
தபால் தலை சேகரித்தல் பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தபால் தலை சேகரித்தல் பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 24th December 2017 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தபால் தலை சேகரித்தல் பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றத்தின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தபால் தலை சேகரித்தல் தொடர்பான பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக அந்த மன்றத்தின் தலைவர் கடல் நாகராஜன் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலக்கிய மன்றத்தின் சார்பில் 25 மாணவ, மாணவிகளுக்கு வருகிற 31- ஆம் தேதி இலவசமாக தபால் தலை சேகரித்தல் தொடர்பான பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர், பள்ளியின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் வருகிற 27 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்படும். மேலும், பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.
    எனவே, ஆர்வமுள்ளவர்கள் 'பாரதிதாசன் மன்றம், 41- காமராஜ் நகர், ஆல்பேட்டை, கடலூர் 607 001' என்ற முகவரிக்கு உரிய விவரங்களுடன் அனுப்பிவைக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai