சுடச்சுட

  

  தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஆறுதல்

  By DIN  |   Published on : 24th December 2017 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம், வேளங்கிப்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தி பாதிக்கப்பட்டவர்களை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ நேரில் சந்தித்து, நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
  வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜின் குடிசை வீடு தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது. இதைறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சனிக்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
  பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் அசோகன், மாவட்ட பாசறை செயலர் டேங்க் ஆர்.சண்முகம், ஒன்றிய அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய இளைஞரணிச் செயலர் செழியன், கிளைச் செயலர்கள் ஞானசேகரன், மாரிமுத்து, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai