சுடச்சுட

  

  சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, நான்கு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  அந்த அமைப்பின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் ஜோதி குருவாயூரப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலர் அருள் வரவேற்றார். மாநில சத்சங் பொறுப்பாளர் சுப்பு, கார்த்திகேயன், ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட சேவைப் பிரிவு செயலர் ஜெயமுரளி கோபிநாத், மாவட்ட துணைத் தலைவர் திருநாராயணன், கோ.வரதன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
  தீர்மானங்கள்: தேரோடும் வீதிகளில் நடைபெறும் புதைச் சாக்கடை திட்டப் பணி, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆருத்ரா தேர் தரிசன விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, தாற்காலிக கழிப்பறை, சிறப்புப் பேருந்துகள், மருத்துவ வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், அமைப்பு சார்பில் உழவாரப் பணி மேற்கொள்வது, தேர், தரிசன விழா நடைபெறும் இரு நாள்களிலும் சிதம்பரம் நகரில் மது, இறைச்சிக் கடைகளை மூட வேண்டும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai