சுடச்சுட

  

  கரும்புக்கான நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என ஜனநாயக கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
  விருத்தாசலம், நல்லூர், வேப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் எ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை ஒருங்கிணைந்த கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் மாவட்ட
  ஜனநாயக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராமர் தலைமையில் அண்மையில்
  விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
  அந்த மனுவில் கூறியுள்ளதாவது: ஏ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கித் தொகையை வழங்கவில்லை. நடப்பாண்டுக்கு மத்திய அரசு அறிவித்தபடி கரும்பு டன்னுக்கு ரூ. 2,425 விலையை கடந்த 11 மாதமாக வழங்கவில்லை. ஆலையில் அரைவை தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட வேண்டிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கடந்த 2012 - 13 -ஆம் ஆண்டுக்கான காலதாமதமான கரும்பு பணத்துக்கு வட்டித் தொகையை 2017 ஏப்ரல் மாதத்துக்குள் வழங்க பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட ஆலை நிர்வாகம் இதுவரையில் அதனை வழங்கவில்லை. பதிவு செய்யப்படாத கரும்பை டன்னுக்கு ரூ. 3 ஆயிரம் செலுத்தி வாங்கும் நிர்வாகம், பதிவு செய்யப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு 12 மாதமாக நிலுவை வைத்துள்ளது. இவ்வாறு அரசின் பல்வேறு வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் அரைவையை நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai