சுடச்சுட

    

    நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

    By DIN  |   Published on : 24th December 2017 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார் சனிக்கிழமை ஆய்வு (ர
    ம்) செய்தார்.
    அப்போது, காவல் நிலையத்தின் பதிவேடுகள், வழக்குக் கோப்புகளை பார்வையிட்டு, காவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நெய்வேலி நகரிய காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது.
    இதற்கான சொந்தக் கட்டடம் கட்டும் பணி வடக்குத்து ஊராட்சியில் ரூ. 1.23 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளையும் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார். அப்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கடலூர் உதவிச் செயற்பொறியாளர் ரகு, உதவிப் பொறியாளர் சாந்திலட்சுமி ஆகியோருடன் கட்டடப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் ரவீந்திரராஜ் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai