Enable Javscript for better performance
பணி நிரவல் செய்யப்பட்டஅண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    பணி நிரவல் செய்யப்பட்டஅண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 24th December 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்வேறு துறைகளுக்குப் பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணாமலைநகர் பூமாகோயில் எதிரே சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குப் பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அரசு விதிமுறைப்படி மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும். பருவகால விடுமுறை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பூமா கோயில் எதிரே ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    பல்கலைக்கழகப் பணி நிரவல் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.ஜவகர் தலைமை வகித்தார். நட்ராஜ்கிருஷ்ணமூர்த்தி, ஜே.வெங்கடேஷ், கே.ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எல்.ஹரிகிருஷ்ணன் உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலர் பி.வாஞ்சிநாதன், மாவட்டக் குழுவைச் சேர்ந்த எஸ்.சங்கமேஸ்வரன், அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் என்.கலியமூர்த்தி, வட்டச் செயலர் கே.என்.பன்னீர்செல்வம், மாதர் சங்கத் தலைவி வி.மல்லிகா, ஆட்டோ சங்க செயலர் டி.மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். அண்ணாமலைநகர் செயலர் ஜி.கோபால் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai