சுடச்சுட

    

    பண்ருட்டி பேருந்து நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வேகமாக நுழைந்த தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
    பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூர், காந்தி நகரைச் சேர்ந்த அன்பழகன் மனைவி பேபி (45). இவர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்வதற்காக சக்தி மாலை வாங்க பண்ருட்டிக்கு வந்தார். பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பேபி நடந்து சென்றபோது, பேருந்து நிலையத்துக்குள் வேகமாக நுழைந்த தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai