சுடச்சுட

    

    எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
    கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு கடலூர் நகர அதிமுக சார்பில், நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    மாவட்ட அதிமுக துணைச் செயலர் முருகுமணி, எம்.ஜி.ஆர். மன்ற செயலர் ஜி.ஜெ.குமார், விவசாயப் பிரிவுச் செயலர் கே.காசிநாதன், பேரவைப் பொருளாளர் ஆறுமுகம், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் வ.கந்தன், கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர்கள் தி.ரவிச்சந்திரன், ஆதிபெருமாள், வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதேபோல, டிடிவி.தினகரன் அணியின் நகரச் செயலர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில் நகர்மன்ற முன்னாள் தலைவர் சி.கே.சுப்ரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ஜெயச்சந்திரன், சாமிக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கடலூர் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மஞ்சக்குப்பத்திலுள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் பி.சிவக்கொழுந்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் எஸ்.ராஜாராம், பொருளாளர் எக்ஸ்.வேதநாயகம், துணைச் செயலர் ஏ.லெனின், நிர்வாகிகள் ஜி.வைத்தியநாதன், எஸ்.தர்மபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    பின்னர், அவர்கள் அனைவரும் பாரதிசாலையில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    நெய்வேலியில்
    அதேபோல, பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட அதிமுக பொருளாளர் ஜானகிராமன், அவைத் தலைவர் ராஜதுரை, நகரச் செயலர் முருகன் ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
    மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    நெய்வேலி, வட்டம் 9-இல் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர அவைத் தலைவர் க.வெற்றிவேல், செயலர் கோவிந்தராஜ், அண்ணா தொழிற்சங்கச் செயலர் ராம.
    உதயகுமார், பொருளாளர் தேவானந்தன், அலுவலகச் செயலர் அல்போன்ஸ், நகர கழக நிர்வாகிகள் பத்மா செல்வராஜ், கர்ணன், ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இதேபோல, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு ஒன்றிய அதிமுக செயலர் கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    காடாம்புலியூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கி.தேவநாதன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி
    மரியாதை செலுத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai