சுடச்சுட

  

  கடலூரில் கடலில் மூழ்கி ராணுவச் செவிலியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
  கர்நாடக மாநிலம், பெங்களூரு
  கங்கநெல்லியைச் சேர்ந்தவர் பைரோஸ் மனைவி ஆலம் (45). இவர், அசாம் மாநிலம், தேஜாப்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடலூர் செம்மண்டலத்திலுள்ள உறவினரது நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் வந்திருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடலூர் துறைமுகம் அருகிலுள்ள சிங்காரத்தோப்புகோரி பகுதியிலுள்ள கடலுக்குச் சென்று குளித்துள்ளார்.
  அப்போது, ஆலம் மற்றும் வேலூர் மாவட்டம், மேல்விஷாரத்தைச் சேர்ந்த இக்பால் மகள் சபீரா (18) ஆகியோர் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக அவரது உறவினர்கள் இருவரையும் மீட்டு கரை சேர்த்தனர். பின்னர், கடலூர் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், ஆலம் உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் துறைமுகம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai