Enable Javscript for better performance
கிறிஸ்துமஸ் வியாபாரம் மந்தம்- Dinamani

சுடச்சுட

    

    நிகழாண்டும் கிறிஸ்துமஸ் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என வியாபாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
    இயேசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழாவின் போது, திருப்பலி நடத்தியும், வீடு மற்றும் தேவாலயங்களில் குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாழ்த்து, பரிசுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்வது வழங்கம்.
    நிகழாண்டு கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகள், தேவாலயங்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், நட்சத்திர விளக்குகள் அமைத்தும் ஜொலிக்கவிட்டுள்ளனர்.
    பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஒரு வாரம் முன்னரே, பேன்சி, ஸ்டேஷனரி கடைகளில், ஸ்டார், வண்ண சீரியல் விளக்குகள், குடில்கள், பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
    இருப்பினும், கிறிஸ்துமஸ் பொருள்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல, கேக் விற்பனையும் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai