சுடச்சுட

  

  கோயில் பூசாரியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த 4 பேர் கைது

  By DIN  |   Published on : 25th December 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோயில் பூசாரியைக் கட்டிப் போட்டுவிட்டு நகைகள், உண்டியல் காணிக்கைப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
  வேப்பூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் க.முத்துலிங்கம் (47). அதே பகுதியில் ஆற்றங்கரையோரம் மெக்காயி அம்மன் கோயிலை அமைத்து நிர்வகித்து வருகிறார்.
  இந்த நிலையில், கடந்த 8 -ஆம் தேதி வழக்கம் போல, கோயிலைப் பூட்டிவிட்டு இரவு உறங்கிக் கொண்டிருந்த முத்துலிங்கத்தை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு, கோயிலிலிருந்த 17 பவுன் நகைகள், உண்டியல் காணிக்கை ரூ. ஒரு லட்சம், அவர் கையில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
  இதுதொடர்பாக வேப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் சேலம் மாவட்டம், சாவடி கிராமத்தைச் சேர்ந்த வேல் (30), வீரகனூர் ராமலிங்கம் (20), மாதேஸ்வரன் (20), வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்த சண்முகம் (50) உள்பட 10 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், வீரகனூரைச் சேர்ந்த பெ.விஜயகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai