சுடச்சுட

    

    சென்னை ஆர்.கே. நகர். சட்டப்
    பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர் பேருந்து நிலையம் அருகே டிடிவி.தினகரன் அணியைச் சேர்ந்த நகரச் செயலர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில், அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
    மங்கலம்பேட்டை நகர அதிமுக அம்மா அணி சார்பில் நகரச் செயலர் வி.முகமதுசாலி தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
    விருத்தாசலத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகி சி.காமராஜ் தலைமையில் அதிமுகவின் ஒரு பிரிவினர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
    திட்டக்குடியில் நகரச் செயலர் ஜி.முருகன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பெண்ணாடம், சிறுப்பாக்கம் பகுதியிலும் தினகரன் அணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    நெய்வேலியில்...: பண்ருட்டியில் தினகரன் அணியின் நகரச் செயலர் ஏ.வி.பி.சக்திவேல் தலைமையில், அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாகச் சென்று நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
    வடலூர் நகரச் செயலர் வி.பாக்கியராஜ் தலைமையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் ஊர்வலமாகச் சென்று எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
    சிதம்பரத்தில்...: சிதம்பரத்தில் தினகரன் அணியைச் சேர்ந்த கடலூர் மாவட்டச் செயலர் கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமையில் நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நான்கு வீதிகளில் ஊர்வலகமாக வந்து பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai