சுடச்சுட

    

    திட்டக்குடி அருகே அரியராவி கிராமத்தில் 3 வீடுகள் தீ விபத்தில் சேதமடைந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
    திட்டக்குடியை அடுத்துள்ள அரியராவி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (70). விவசாயியான இவர், சனிக்கிழமை இரவில் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவரது வீடு முற்றிலுமாக எரிந்ததோடு, அருகில் இருந்த மணிமொழி, பழனிவேல் ஆகியோரது வீடுகளும் எரிந்து சேதமடைந்தன.
    தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    எனினும், வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. மொத்தம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள துணிகள், வீட்டு உபயோகப் பொருகள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெண்ணாடம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai