சுடச்சுட

    

    பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    கடலூரில் பாரதிசாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் தென்.சிவக்குமார், செயலர் நா.தாமோதரன், அமைப்பாளர் சி.மணிவேல், ஒன்றியத் தலைவர் கோ.குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    திமுக சார்பில் தேர்தல் பணிக் குழுச் செயலர் இள.புகழேந்தி தலைமையில் அந்தக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட திமுக அவைத் தலைவர் து.தங்கராசு, நகரச் செயலர் கே.எஸ்.ராஜா, நிர்வாகிகள் அகஸ்டின் பிரபாகர், குணசேகரன், சலீம், தனஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் த.ஸ்ரீதர், தமிழரசன், கிட்டு, சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    அதேபோல, மதிமுக சார்பில் மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம் தலைமையில் மாநில அமைப்புச் செயலர் வந்தியத்தேவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் கடல்செல்வம், ஜெயசங்கர், வரதராஜூலு, சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    குறிஞ்சிப்பாடியில்
    வடலூரில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு நகர தி.க. தலைவர் புலவர் ராவணன் தலைமையிலும், குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு நகரத் தலைவர் தா.கனகராசு தலைமையிலும் பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய தி.க. தலைவர்
    கோ.இந்திரஜித், செயலர் இரா.
    குணசேகரன், மண்டல மகளிரணிச் செயலர் ரமாபிரபா, நிர்வாகிகள் வெ.செந்தில்குமார், ராமனாதன், செ.வேல்முருகன், மருவாய் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    சிதம்பரத்தில்
    சிதம்பரத்தில் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மேலரத வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட விசிக செயலர் பால.அறவாழி தலைமை வகித்தார்.
    மாநில, மாவட்ட நிர்வாகிகள் செல்வ.செல்வமணி, பெரு.திருவரசு, பி.குறிஞ்சிவளவன், அ.கனகசபை, பேராசிரியர் அசோகன், க.ஆதிமூலம், பேரறிவாளன், சாமிநாதன், இளம்வழுதி, காமராசு, ராஜேஷ், சிற்றரசு, இன்பழலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    நெய்வேலியில்
    அதேபோல, நெய்வேலி பாமக சட்டப்பேரவைத் தொகுதி சார்பில், தந்தை பெரியாரின் 44-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
    நெய்வேலி பெரியார் சதுக்கத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட முன்னாள் பாமக செயலர் கோ.ஜெகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், நெய்வேலி வடக்கு ஒன்றியச் செயலர் செல்வக்குமார், நகர முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், இள.குகநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    அதேபோல, அண்ணாகிராமம் ஒன்றியம் சாத்திப்பாட்டு கிராமத்தில் மாவட்ட பகுத்தறிவர் கழகத் தலைவர் ரா.கந்தசாமி தலைமையில் தி.க.வினர் பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவாமூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு சிவா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ரா.தசரதன், சே.தேவசுந்தரம், சு.குமரேசன், ரா.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai