சுடச்சுட

    

    கடலூரில் பேருந்து மோதியதில் பெண் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    கடலூர் அருகே உள்ள புலியூர்காட்டுசாகையைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி (65). விவசாயியான இவர், தங்களது பகுதியில் விளையும் காய்கறிகளை கடலூர் உழவர் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை அரசு நகரப் பேருந்தில் கடலூர் வந்துள்ளார். போக்குவரத்துப் பணிமனை எதிரே அவரை இறக்கி விட்ட நிலையில், சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அதே பேருந்து அவர் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
    விபத்து குறித்து அவரது உறவினர் ரா.ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில், திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    லாரியில் பைக் மோதல்: இளைஞர் சாவு
    கடலூர் அருகே லாரியில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    வேப்பூர் அருகே உள்ள அரசங்குடியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சூர்யபிரகாஷ் (28). திருமணமாகி 8 மாதங்களாகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை சேலம் - விருத்தாசலம் சாலையில் ரெட்டிகுறிச்சி பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் சென்று கொண்டிருந்த சூர்யபிரகாஷ் லாரியில் மோதினார்.
    இந்த விபத்தில் சூர்யபிரகாஷின் தலையில் பலத்த காயமேற்பட்டு நிகழ்விடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை ரா.பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில், சிறுப்பாக்கம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். மேலும், லாரி ஓட்டுநரான தென்காசியைச் சேர்ந்த பா.முருகனை (40) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai