சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிறுப்பு கிராமத்தில் உள்ள கோயில் குளத்தில் முதலை இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
  கொண்டாயிறுப்பு கிராமத்தின் மையப் பகுதியில் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமாக குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்துக்குக் கீழணையிலிருந்து பாசன வாய்க்கால் வழியாகத் தண்ணீர் வருகிறது. கீழணையில் உள்ள முதலைகளில் ஒன்று பாசன வாய்க்கால் வழியாக குளத்துக்கு வந்துள்ளது.
  இந்த நிலையில், குளத்தில் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடும் போது, சுமார் 5 அடி நீளம் உள்ள முதலை இருப்பதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியருக்குத் தகவல் கொடுத்தனர்.
  குளத்தில் அதிக அளவில் தண்ணீர் உள்ளதால் முதலையைப் பிடிக்க மாற்று வழியில் முயற்சி மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். முதலையைப் பிடிக்கும் வரை குளத்தில் பொதுமக்கள், சிறுவர்கள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு எதிரே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்படுவதால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai