சுடச்சுட

    

    காட்டுமன்னார்கோவில் அருகே மூட்டையில் கட்டி மணலைத் திருடி விற்பனை செய்வதைக் கண்டறிந்து போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே கீழகஞ்சங்கொல்லை கிராமம் உள்ளது. இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது.
    கிராமத்தில் உள்ள சிலர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நூதன முறையில் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்து தெருவில் அடுக்கி வைத்துள்ளனராம். மணல் தேவைப்படும் நபர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ. 20-க்கு விற்பனை செய்து வருகின்றனராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் சிவராமன், காவலர் ராஜா ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தெருவில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளைப் பார்த்தனர்.
    இதுகுறித்து அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களைக் கேட்டபோது, தனக்குத் தெரியாது என்று கூறினராம். அங்கு அடுக்கி வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளைக் கிழித்து மணலைக் கீழே கொட்டினர். மேலும், இதுபோன்று மணல் கடத்தலில் ஈடுபட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai