சுடச்சுட

  

  மனித உரிமைகள், கடமைகள், கல்வி தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் அரசியல் அறிவியல் மற்றும்  பொது நிர்வாகப் பிரிவு சார்பில், பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒரு நாள் பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது. 
  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்  நிதியுதவியுடன், பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக ஹைடெக் ஹாலில்  நடைபெற்ற இந்த முகாமை, பல்கலைக்கழக  துணைவேந்தர் செ.மணியன் தொடக்கி வைத்துப் பேசுகையில், மனித அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு  ஏற்படுத்துவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். மேலும், பல்கலைக்கழகம் உலக மற்றும் தேசிய அளவில் கடந்த 4 ஆண்டுகளாக மிகச் சிறப்பான தரவரிசை இடங்களைப் பிடித்து, அதிவேக வளர்ச்சி  பெற்று  வருவதைக் குறிப்பிட்டவர், இதற்கு பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்கள்,  அதிக அளவிலான தரமான ஆய்வுக் கட்டுரைகள், தரமான புத்தகங்கள் வெளியீட்டுக்கு உழைத்த பேராசிரியர்களை பாராட்டினார். 
  தொலைதூரக் கல்வி இயக்குநர் எம்.அருள் தலைமை வகித்துப் பேசுகையில், மனித உரிமைகள்  மதித்து போற்றப்பட வேண்டியதன்  அவசியம்  குறித்து வலியுறுத்தினார். தமிழ்நாடு டாக்டர்  அம்பேத்கர்  சட்டப் பல்கலைக்கழக மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வித் துறைத் தலைவர் ஜே.வின்சென்ட் காமராஜ் பேசுகையில்,  மனித உரிமைக் கல்வி குறித்த பயிற்சியின் அவசியம் குறித்தும், மனித  உரிமைகள், கடமைகள் கல்வியின்  உள்கூறுகள்  தொடர்பாகவும்  விரிவாக எடுத்துரைத்தார். இந்த வகுப்பில்  பல்துறை மாணவ, மாணவிகள் 150 பேர்  கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் ஜே.வின்சென்ட் காமராஜ், பி.சக்திவேல்,  சி.சுப்ரமணியன், கே.செந்தில்குமார்,  எஸ்.பாலமுருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  இந்த முகாமில், மனித உரிமைகள் தொடர்பான அரசியல் அமைப்பு சட்ட விதிகள், சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் 1948, சர்வதேச மனித உரிமைகள் சாசனம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கபட்டன. 
  நிறைவு விழாவில் பதிவாளர் கே.ஆறுமுகம்,  கலைப்புல முதல்வர் இ.செல்வராஜன் ஆகியோர் நிறைவுரையாற்றினர். முகாம் ஏற்பாடுகளை தொலைதூரக் கல்வி இயக்கக அரசியல் அறிவியல் மற்றும்  பொது நிர்வாகப் பிரிவுத் தலைவர் சி.சுப்ரமணியன், துணைப் பேராசிரியர் இரா.மூர்த்தி, ஆய்வு திட்ட உதவியாளர் ரா.ஜெகநாத்  ஆகியோர் 
  செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai