சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  பரங்கிப்பேட்டையில் விதிகளை தொடர்ந்து மீறிவரும் தனியார் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  2011-ஆம் ஆண்டு நிலம் அளித்த விவசாயிகளுக்கு, நிறுவனம் வழங்கிய ரூ.1 கோடி நல நிதியில் முறைகேடு நடைபெற்றது என்றால், நிறுவனத்தின் நிர்வாகத்தையும், நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கத்தையும் முழுமையாக விசாரணை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ஜி.மணிவண்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய அரசுப் பணியாளர்கள் சங்க மகா சம்மேளன சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், ஏ.மார்க்ஸ், ஏஐடியூசி மாநிலத் தலைவர் (குடிநீர் வடிகால் வாரியம்) எச்.அழகிரி, கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
  வட்டச் செயலர்கள் பி.ஜெகரட்சகன், ஆர்.சக்திவேல், ஏ.ராஜூ, கே.கலியபெருமாள், ஏ.கே.சுப்ரமணியன், எம்.ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai