சுடச்சுட

    

    ஊதிய உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 27th December 2017 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊதிய உயர்வு வழங்கக் கோரி, கடலூரில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் தமிழகம் முழுவதும் டிச.14, 15 ஆம் தேதிகளில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. 
     அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, கடலூர், விருத்தாசலம் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகம் போராட்டத்தின் போது பணிக்கு வராதவர்களுக்கு விடுப்பு எனக் கூறியதாகத் தெரிகிறது.
     இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமைநிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
     இதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து பணிமனை வாயில் முன் தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், பணிமனை வாயிலுக்குப் பூட்டுப்போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிமனையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டிய பேருந்துகள் வெளியேற முடியவில்லை.
     இதையடுத்து, போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர், காவல் துறையினர் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்கள்
    போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai