Enable Javscript for better performance
சுனாமி நினைவு தினம்: அரசியல் கட்சியினர் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    சுனாமி தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
    2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஆழிப்பேரலை எனும் சுனாமி தாக்கியதில் கடலூர் மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 13-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூணுக்கு பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    அதிமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன் தலைமையில் நகரச் செயலர் ஆர்.குமரன், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொழிற்சங்கச் செயலர் ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய அணிச் செயலர் கே.காசிநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன், பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தி.ரவிச்சந்திரன், ஆதிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    திமுக சார்பில் மாநில மாணவரணி செயலர் இள.புகழேந்தி தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில நிர்வாகிகள் த.ஸ்ரீதர், பா.ரா.முரளி, மாவட்ட அமைப்பாளர்கள் தே.செல்வம், மா.சுரேஷ்பாபு, க.புருஷோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட மீனவரணி தலைவர் கடல் கார்த்திகேயன் தலைமையில், மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நகரத் தலைவர் என்.குமார், தொழிலாளர் பிரிவுத் தலைவர் டி.ராம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    நாம் தமிழர் கட்சியினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வ.கடல்தீபன் தலைமையிலும், மதிமுகவினர் மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம் தலைமையிலும் மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு தொண்டு நிறுவனத்தினர், பொது நல அமைப்பினர், பள்ளி மாணவ, மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர்.
    கிள்ளை: சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுனாமி தாக்குதலால் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 93 குழந்தைகள் உள்பட 342 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.கலைமணி தலைமையில், முன்னாள் மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, அதிமுக மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, கிரீடு தொண்டு நிறுவன நிர்வாகி வி.நடனசபாபதி மற்றும் மீனவ கிராம நிர்வாகிகள் முன்னிலையில் சின்னவாய்க்கால், பில்லுமேடு கிராமங்களில் உள்ள நினைவு தூண்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 
    பின்னர் அமைதி ஊர்வலமாகச் சென்று பிச்சாவரம் உப்பனாற்றில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கடல் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் கிராமத் தலைவர் கருணாமூர்த்தி, கிராமத் தலைவர்கள் சின்னவாய்க்கால் ரகுபதி, பில்லுமேடு சஞ்சீவ்காந்தி,  கிள்ளை மீனவர் காலனி சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி 
    செலுத்தினர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai