சுடச்சுட

  

  சாத்தமாம்பட்டு கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்களுக்கான மயான பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது. 
  பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது சாத்தமாம்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிராமத்தில் உயிரிழந்தவர்களை, அங்குள்ள தரிசு புறம்போக்கு நிலத்தில் புதைத்து வந்துள்ளனர்.
  கடந்த 2006-ஆம் ஆண்டு வருவாய்த் துறையினர் மேற்கூறிய இடத்துக்கு பட்டா வழங்கிவிட்டனர். 
  இந்த நிலையில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சனிக்கிழமை காலமானார். 
  இவரது சடலத்தை அடக்கம் செய்ய இடம் இல்லாததால் பிரச்னை ஏற்பட்டது. எனவே, அருந்ததியர் சமூகத்தினருக்கு நிரந்தரமான மயான வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
  இது தொடர்பாக பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் விஜய்ஆனந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளர் சுந்தரவடிவேலு, வருவாய்த் துறை அதிகாரிகள், சாத்தமாம்பட்டு கிராம  முக்கியஸ்தர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் துரை.மருதமுத்து, ஆ.வெங்கடசாமி, அமைப்பாளர் க.தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  கூட்ட முடிவில், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை ஆதிதிராவிடர் மயானத்தில் அடக்கம் செய்வது எனவும், ஆதி திராவிடர் மயானம் அருகே அருந்ததியர்களுக்கு மயானம் அமைக்க  45 நாள்களில் இடம் ஒதுக்கித் தருவதாகவும் எழுத்து மூலம் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் பிரச்னையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.


   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai