Enable Javscript for better performance
மரத்தில் வேன் மோதல்:  இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிறுப்பாக்கம் அருகே மரத்தின் மீது வேன் மோதியதில் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்றார். பின்னர் செவ்வாய்க்கிழமை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வேப்பூர்-சேலம் சாலையில் கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே சென்றபோது வேன் முருகேசனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவரது மகன் பி.இ. பட்டதாரியான ரவிசங்கர் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முருகேசனின் மனைவி ஜோதிமணி (44), மகள் பரணிஸ்ரீ, உறவினர் செல்வகுமார் ஆகியோர் காயமடைந்தனர். 
     தகவலறிந்த சிறுப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரவிசங்கர் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai