Enable Javscript for better performance
வயல்வெளிப் பள்ளி பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விதை பெருக்கத் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள மணிலா வயலில், விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி  அளிக்கப்பட்டது.
    குறிஞ்சிப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த 30 விவசாயிகளுக்கு விதை பெருக்கத் திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் விதை மணிலா வழங்கப்பட்டு விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மணிலா விதைப்பு முதல் அறுவடை வரை 14 வாரங்களுக்கு, விவசாயிகளுக்கு வயல் வெளிப் பள்ளி பயிற்சியை விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் அளித்து வருகின்றனர். அதன்படி, விதை நேர்த்தி, களை கட்டுப்பாடு குறித்து முதல் 2 வாரங்கள் நடந்த வயல் வெளி பள்ளியில்  பயிற்சி அளித்தனர். 3-ஆவது வாரமாக பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலை, பூச்சி தாக்குதலுக்குப் பின் செய்ய வேண்டிய நடைமுறைகள், நோய் தடுப்பு குறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில், பேராசிரியர்கள் சரவணன், நடராஜன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை குறிஞ்சிப்பாடியில் பயிற்சி அளித்தனர். 
    இதில், பூச்சி மருந்தைப் பயன்படுத்தாமல் இனக் கவர்ச்சி முறையில் ஆண் அத்துப் பூச்சியை கவர்ந்திழுத்து அழிப்பதின் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினர். பின்னர், 30 விவசாயிகளுக்கு இன கவர்ச்சிப் பொறி, ஊட்டச்சத்து மருந்து ஆகியவற்றை முழு மானியத்தில் வழங்கினர். 
    பயிற்சியில், குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai