சுடச்சுட

  

  கடலூரில் வீட்டு ஜன்னலை உடைத்து16 பவுன் நகை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
   கடலூர் செல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் மாலதி (47). கடலூர் அருகே உள்ள கன்னியக்கோயிலில் தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலைப்பார்த்து வருகிறார். 
  கடந்த 21-ஆம் தேதி சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றவர் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. 
   இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கலூர் முதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து அதன் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.  இதுதொடர்பாக காவல்துறையினர் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai