சுடச்சுட

  

  கடலூர் அருகே 2 இளைஞர்கள் மாயமானது தொடர்பாக அவர்களது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
   கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் மாயவன் மகன் தருமன்(21), இளநிலை பட்டதாரி. காசிதேவன் மகன் மகாபிரபு (18), பாலிடெக்னிக் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை அதேப் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் தங்கதுரை, ராஜேந்திரன் மற்றும் சிலருடன் உப்பனாறு பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, நண்பர்கள் ஆற்றைக் கடந்தபோது தருமன், மகாபிரபு இருவரும் மறுகரைக்கு வரவில்லையாம். இதனையடுத்து, மற்றவர்கள் ஊருக்குள் சென்று தங்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
   அப்போது, தாங்கள் அதேப் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறித்தபோது அதன் உரிமையாளர் விரட்டியதாகவும், அதனால், உப்பனாற்றில் விழுந்து நீந்தியபோது இருவரும் கரை திரும்பவில்லையெனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து காணாமல்போன இருவரையும் மீட்டுத் தருமாறு அவர்களது உறவினர்கள் கடலூர்-சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் சமாதானம் பேசியதைத் தொடர்ந்து கலைந்துச் சென்றனர்.
   இதையடுத்து, காணாமல் போனவர்களை காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், உள்ளூர் இளைஞர்கள் ஆகியோர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai