சுடச்சுட

  

  கடலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சி.வீரப்பன், துணைச் செயலர்கள் கே.வைத்தியலிங்கம், பி.பாஸ்கரன், பொருளாளர் பி.கலியபெருமாள், துணைத் தலைவர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியன் நகரச் செயலர் ஜி.மணிவண்ணன், சங்க நிர்வாகிகள் வீர.ஜெயராமன், ஆர்.தண்டபாணி, கே.மகாலிங்கம், ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய வேண்டும். மணலுக்கு மாற்றாக கூறப்படும் எம்.சான்ட் உற்பத்திக்குத் திட்டமிட்டு மணல் தேவையை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் மற்றும் அனைத்துக் கட்டுமானப் பணிகளிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீதம் வேலைகளை ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். மணல் பிரச்னையால் வேலையிழந்த காலத்துக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நலவாரியம் மூலம் நிவாரணமாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் மாட்டு வண்டி மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பிலும் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டப் பொருளாளர் எம்.மனோரஞ்சிதம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலர் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai