Enable Javscript for better performance
கிராமக் கோயில் பூசாரிகள் புத்துணர்வுப் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கிராமக் கோயில் பூசாரிகள் புத்துணர்வுப் பயிற்சி முகாம்

    By நெய்வேலி,  |   Published on : 28th December 2017 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹிந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளை, சமுதாய நல்லிணக்கப் பேரவை ஆகியவை இணைந்து நடத்திய கிராமக் கோயில் பூசாரிகள் புத்துணர்வுப் பயிற்சி முகாம் பண்ருட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     ஹிந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளையின் கெüரவச் செயலர் பி.மோகனகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் டி.வாசவி கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கெüரவத் தலைவர் வி.கருணாகரன், அறங்காவலர் வி.ஜீவானந்தம் செட்டியார் ஆகியோர் வரவேற்றனர். செயலர் ச.ராஜேந்திரன், துணைத் தலைவர் எஸ்.வைரக்கண்ணு அறிமுகம், நோக்கவுரை நிகழ்த்தினர். துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.கே.நாராயணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எம்.மதன்சந்த், துணைத் தலைவர் துளசி.சுகுமார், இணைச் செயலர்கள் கே.முத்து சீனுவாசன், டி.கே.திருவேங்கடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     முகாமில் பங்கேற்ற திருவண்ணாமலை பூஜ்ய ராமநந்த சுவாமிகள், ரிஷிகேஸ் பூஜ்ய ரகுவீரரானந்த சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கி, பூஜை முறைகள், மந்திரம் ஓதுதல், அபிஷேகம் செய்தல், தமிழில் அர்ச்சனை செய்தல் குறித்து கிராமக் கோயில் பூசாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
     இந்த முகாமில் சுமார் 240-க்கும் மேற்பட்ட கிராமக் கோயில் பூசாரிகள் கலந்து கொண்டனர். சமூதாய நல்லிணக்கப் பேரவையின் குரு.சுப்ரமணியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai