சுடச்சுட

  

  சிதம்பரம் கூட்டுறவு நகர வங்கியின் நூற்றாண்டு விழா மற்றும் நூறாவது ஆண்டு பொதுப் பேரவைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
   கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் சொ.ஜவகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.சண்முகம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தில்லை ஏ.கே.எஸ்.சேகர், எஸ்.சங்கர், ஏ.செல்வரங்கம், ஏ.வீரமணி, சி.எஸ்.பாஸ்கரன், ஜி.நாராயணன், பி.சகுந்தலா, ஜே.பிரேம்குமாரி, பி.சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் மேலாண்மை இயக்குநர் வே.இளங்கோ வரவேற்றார். பொது மேலாளர் ஆர்.துரை நூறாவது ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
   விழாவில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், முன்னாள் எம்.பி. பு.தா.இளங்கோவன், நகர வங்கி முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஆர்.சேதுராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். வங்கியின் 2018-ஆம் ஆண்டு நாள்காட்டியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வெளியிட, அதனை வங்கித் தலைவர் சொ.ஜவகர் பெற்றுக் கொண்டார்.
   விழாவில் ஏ வகுப்பு உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது.
   நகர்மன்ற முன்னாள் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத் தலைவர் வளர்மதி, சிவபுரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி, நிலவள வங்கித் தலைவர் கே.பாலசுப்பிரமணியன், வீடு கட்டும் சங்கத் தலைவர் டி.கே.வேம்பு, தில்லை ஜி.குமார், கருப்பு ராஜா, வழக்குரைஞர்கள் ஞானசேகரன், நடனம், பரங்கிப்பேட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் பி.அசோகன், துணைத் தலைவர் கே.திருமாறன், தில்லை ஏ.கே.சி.கோபி, வங்கியின் முன்னாள் இயக்குநர் எம்.ஜி.பாரி, என்.பானு, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai