Enable Javscript for better performance
தேசிய நுகர்வோர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து நுகர்வோர் - பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கம் சார்பில், பண்ருட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
     அதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்து, நுகர்வோர் சட்டங்கள் குறித்தும், வழக்குத் தொடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கினார். ஆர்.பக்கிரி, எல்.தட்சிணாமூர்த்தி, அண்ணாமலை, செய்யது இஸ்மாயில், புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடலூர் ராமலிங்கம், சமயபுரத்தாள், நடராஜன், கமலக்கண்ணன், சுசித்ரா, இந்திராதேவி, கெüதமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாநிலப் பொதுச் செயலர் ஏ.காமராஜ் வரவேற்றார்.
     கூட்டத்தில் பண்ருட்டி நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆட்டோ மற்றும் கடைகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும். பண்ருட்டி ஒன்றியப் பகுதிகளான வ.உ.சி. நகர், மணி நகர், டிஆர்.வி. நகர், திருநகர், பாரதி நகர், பூங்குணம், எல்.என்.புரம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள் வீட்டினுள் புகுந்து பொருள்களைச் சேதப்படுத்தி வருகிறது. எனவே, பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டியில் உள்ள கழிப்பறை 24 மணி நேரமும் செயல்பட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai