சுடச்சுட

  

  பயிர்க் காப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By  சிதம்பரம்,  |   Published on : 28th December 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, சிதம்பரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் எதிரே தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக விவசாயிகள் வாழ்வுரிமைச் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   2016 - 17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்காத தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவத்தைக் கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் குமரன், கரிகாலன், சரவணன், முருகன், தில்லைநாயகம், பாண்டியன், தாடிமுருகன், பாலசுப்பிரமணியன், ஆர்.கே.குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai