சுடச்சுட

  

  பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்து சமூக நலத் துறை இயக்குநர் ஆய்வு

  By கடலூர்,  |   Published on : 28th December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சமூக நலத் துறை இயக்குநர் வே.அமுதவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலமாக "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
   இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சமூக நலத் துறை இயக்குநர் வே.அமுதவல்லி செவ்வாய்க்கிழமை கடலூர் வந்திருந்தார். அவர், கடலூர் அரசு மருத்துவமனை, திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்கு சிகிச்சை பெறும் தாய்மார்கள், கர்ப்பிணிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கடலூர் மாவட்ட அரசு சேவை இல்லம், அரசு குழந்தைகள் காப்பகத்தில் பயிலும் பெண் குழந்தைகள், கடலூர் நகர்புற காந்தி நகர் அங்கன்வாடி மையம், உச்சிமேடு கிராமத்தில் உள்ள சுய உதவிகுழுக்கள், அங்குள்ள பெண் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடினார்.
   பின்னர், கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில், "பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தைச் செயல்படுத்தும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தினார்.
   குழந்தைகள் நல இணை இயக்குநர் நந்திதா, மாவட்டத் திட்ட அலுவலர் (விழுப்புரம்) கோ.அன்பழகி, கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்டத் திட்ட அலுவலர் பழனி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) எஸ்.மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.ஆர்.ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai