சுடச்சுட

  

  கடலூரில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்டபடி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 5 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் கடலூரில் உள்ள போக்குவரத்துப் பணிமனை எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில் சென்னையில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தமிழகம் முழுவதும் டிசம்பர் 14, 15- ஆம் தேதிகளில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 பேர் மீது நடவடிக்கை எடுத்து விடுப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது.
   கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்துப் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கடலூர், விருத்தாசலம் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகம் போராட்டத்தின் போது, பணிக்கு வரவில்லை என விடுப்பாகப் பதிவு செய்ததாகத் தெரிகிறது.
   இதற்கும் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டாவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai