Enable Javscript for better performance
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மர்ம நபரை பண்ருட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.
     பண்ருட்டி, வடகைலாசம், இ.பி.காலனியைச் சேர்ந்தவர் தையல்நாயகி (69).
     இவர், திங்கள்கிழமை தனது வீட்டின் வெளி வராண்டாவில் அமர்ந்திருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர் அருகில் துக்க நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், தனது சித்திக்கு தங்கச் சங்கிலி செய்ய மாதிரி பார்க்க வேண்டும் என கூறியும் தையல்நாயகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தாராம்.
     அப்போது, தண்ணீர் எடுத்து வருமாறி கூறி, தையல்நாயகி உள்ளே சென்றபோது, தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு மர்ம நபர் மாயமானாராம்.
     இதுகுறித்து தையல்நாயகி அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai