சுடச்சுட

  

  அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

  By  கடலூர்,  |   Published on : 29th December 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம், பஞ்சப்படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என என்எல்சி இன்கோசர்வ் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
   என்எல்சி இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் டி.அமிர்தலிங்கம் (சிஐடியு), கே.பழனிவேல் (தொமுச), சா.ஐயப்பன் (தவாச), க.பாலசுப்பிரமணியன் (தொழிலாளர் விடுதலை முன்னணி) ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவின் விவரம்:
   நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறையாக அமல்படுத்தி பணி நிரந்தரம் செய்வதோடு, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
   மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் உயரும் பஞ்சப்படியை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டியுள்ளது.
   ஒப்பந்தம் மூலம் உயர்த்தப்பட்ட சம்பளத்தை நிர்வாகம் அமல்படுத்த மறுப்பதால், தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5,662 முதல் 6,286 வரை இழப்பு ஏற்படும்.
   எனவே, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளம், பஞ்சப்படி, பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
   இதைத் தொடர்ந்து 5 மாதமாக எட்டு சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், ஒரு கோரிக்கையைக் கூட என்எல்சி இந்தியா நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால், வேறு வழியின்றி கடந்த 22- ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த நிலையில், கூட்டமைப்பின் கூட்டம் வருகிற 31 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai