Enable Javscript for better performance
ஆயுதப்படைக் காவலர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் ஆயுதப்படைக் காவலர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     கடலூர் முதுநகர் சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் மகன் புஷ்பநாதன் (28). கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்தவர் திடீரென போர்வையால் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாராம்.
     இதைப் பார்த்த அவரது தந்தை உடனடியாக அவரை மீட்டு, கடலூரில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai