சுடச்சுட

  

  கடலூர் அருகே உப்பனாற்றில் மூழ்கி காணாமல் போன இரு இளைஞர்கள் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.
   கடலூர் அருகேயுள்ள நடுத்திட்டு அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர்கள் மாயவன் மகன் தருமன் (21), காசிதேவன் மகன் மகாபிரபு (18). இவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்தப் பகுதியிலுள்ள உப்பனாறுக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள தென்னை மரத்தில் இளநீர் பறித்தபோது, தோட்டத்தின் உரிமையாளர் அவர்களைப் பார்த்து திட்டியதாகத் தெரிகிறது. இதில், பயந்து போனவர்கள் அருகில் ஓடிய உப்பனாற்றில் குதித்து, மறுகரைக்குச் செல்ல முயன்றனர். இவர்களில் தருமன், மகாபிரபு இருவரும் மறுகரையை வந்தடையவில்லையாம்.
   இதையடுத்து காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் அவர்களது உறவினர்கள், கடலூர் சிப்காட் தீயணைப்பு மீட்புப் படையினர், முதுநகர் காவல் துறையினர் இணைந்து புதன்கிழமை வரை ஈடுபட்டனர்.
   இந்த நிலையில், வியாழக்கிழமை அவர்களது சடலங்கள் ஆற்றில் மிதப்பதாக உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று சடலங்களை மீட்டனர்.
   கடலூர் துறைமுகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai