சுடச்சுட

    

    என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By  நெய்வேலி,  |   Published on : 29th December 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுக்கும் என்எல்சி இந்தியா நிர்வாகத்தைக் கண்டித்து, ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர், வட்டம் 29-இல் உள்ள சூப்பர் பஜாரில் வியாழக்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ராச.உக்கரவேல் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கே.வெங்கேடசன், அலுவலகச் செயலர் பி.கணேசன், பொருளாளர் ஆர்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாநில என்எப்டிஇ துணைத் தலைவர் வி.லோகநாதன் கண்டன உரையாற்றினார். மாவட்ட ஏஐடியுசி துணைத் தலைவர் டி.மணிவாசகம், பொதுச் செயலர்கள் பி.துரை, வி.குளோப், பொருளாளர் கே.முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
     ஆர்பாட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுக்கும் என்எல்சி இந்தியா நிர்வாகத்தைக் கண்டிப்பது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வீட்டு வசதி, உயர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இதுதொடர்பாக ஜனவர் 4-ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் என்எல்சி இந்தியா நிர்வாரம் பங்கேற்கத் தவறும் பட்சத்தில், அதனால் ஏற்படும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து விதமான தொழில் சச்சரவுகளுக்கும் என்எல்சி இந்தியா நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் அமைப்புச் செயலர் பி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai