சுடச்சுட

  

  மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி மைதானத்தைத் தூய்மை செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
   நெய்வேலி, மந்தாரக்குப்பத்தில் இயங்கி வரும் என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,500 மாணவர்கள் கல்வி பயிற்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மைதானம் புதர் மண்டி கிடந்ததால், பள்ளி மாணவர்கள், நடைபயிற்சி செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
   இதைத் தொடர்ந்து நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பள்ளி மைதானத்தை தூய்மை செய்யும் பணியை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், நெய்வேலி சேவை குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து மேற்கொண்டனர்.
   தூய்மைப் பணிக்கு அரிமா சங்கத் தலைவர் ஆர்.அன்வர்தீன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ஏ.ஜேக்கப் வரவேற்றார். அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.லட்சுமி நாராயணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சீதாராமன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் உதவி ஆய்வாளர் கமலஹாசன், அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ராஜமாரியப்பன், என்.எல்.சி. இந்தியா நிறுவன கல்வித் துறைச் செயலர் இள.நெடுமாறன் ஆகியோர் தூய்மைப் பணியைத் தொடக்கி வைத்தனர்.
   முகாமுகான ஏற்பாடுகளை உடல்கல்வி ஆசிரியர்கள் சத்தியராஜ், ராமசந்திரன், வீரசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai