சுடச்சுட

    

    கடலூரில் சுனாமி எச்சரிக்கை அலாரம் ஒலிப்பு: மாவட்ட நிர்வாகம் விளக்கம்

    By  கடலூர்,  |   Published on : 29th December 2017 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cuddalore

    கடலூரில் சுனாமி எச்சரிக்கை அலாரம் புதன்கிழமை இரவு 2 முறை ஒலித்ததால், மீனவக் கிராம மக்களிடம் பீதி ஏற்பட்டது.
     கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, நல்லவாடு, நாணமேடு உள்பட 49 கடற்கரையோரக் கிராமங்கள் உள்ளன.
     இதில், தாழங்குடாவில் இயற்கை பேரிடர் உள்ளிட்ட காலங்களில் கிராம மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கும் வகையில், புயல் எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
     மேலும், நல்லவாடு, நாணமேடு ஆகிய கிராமங்களில் ஊராட்சி அலுவலகங்களிலும் இந்த அலாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
     இந்த நிலையில் தாழங்குடா புயல் எச்சரிக்கை மையத்தில், புதன்கிழமை இரவு திடீரென சுனாமி எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
     இதைத் தொடர்ந்து அடுத்த 5 நிமிடத்துக்கு பின்னர், மீண்டும் எச்சரிகை ஒலி ஒலித்தது. இதைக் கேட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே பதற்றத்துடன் ஓடி வந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மக்கள், உடனடியாக மாவட்ட நிர்வாக அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை.
     இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அவசர கால கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் கூறியதாவது: இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை அலாரத்தை இயக்கும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தது. ஆனால், பேரிடர் காலங்களில் உரிய தகவல்களைப் பெற்று, இயக்குவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், சென்னையில் இருந்தே கடற்கரையோரம் இருக்கும் இதுபோன்ற எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்க செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.
     கடலூர் மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் சுனாமி எச்சரிக்கை அலாரம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து பரிசோதனை நடத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் 83 கிராமங்களில் இதுவரை 25 கிராமங்களில் பரிசோதனை முடிந்துள்ளது. பரிசோதனைக்காகவே சுனாமி எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என தெரிவித்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai