சுடச்சுட

  

  காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் கடலூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
   கல்வி கற்ற இந்தியர்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உயர் பதவிகளைப் பெற்றுத் தருவதற்காக 1885 -ஆம் ஆண்டு டிசம்பர் 28- ஆம் தேதி உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நெüரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி, வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது.
   இதன் நிறுவன தின விழாவை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.கலையரசன் தலைமையில் மாநிலச் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அன்னதானம் வழங்கினார்.
   நிகழ்ச்சிக்கு இளைஞர் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர்கள் குமார், வெங்கடேசன், கலைச்செல்வன், மீனவரணியின் மாவட்டத் தலைவர் கடல்கார்த்திகேயன், தொழிலாளர் பிரிவின் தலைவர் டி.ராம்ராஜ், சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் எஸ்.ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டத் துணைத் தலைவர் ராஜாராம்,
   நிர்வாகிகள் குப்புசாமி, ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai